ரஜினிக்கு அடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இதனாலையோ என்னவோ ரசிகர்கள் இவரை செல்லமாக வசூல் மன்னன் என அழைத்து வருகின்றன கடைசியாக விஜய் நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றதை தொடர்ந்து..
இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் இளம் இயக்குனர் அட்லீ உடன் கைகோர்த்து நடித்த தெறி, மெர்சல், பிகில் என அனைத்து படங்களும் வெற்றி தான்.
குறிப்பாக பிகில் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது இந்த படத்தின் ஹிட்டுக்கு முக்கிய காரணமே விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தான் என கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக வயதான ராயப்பன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று அசத்தியது ராயப்பன் கதாபாத்திரம் குறித்த அட்லி சமீபத்தில் பேட்டி ஒன்றில் சொன்னது என்னவென்றால்..
முதலில் அந்த ராயப்பன் கதாபாத்திரத்தில் வயதான ஏதோ ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்கலாம் என்று அட்லீ நினைத்தாராம் சரி விஜயை நடிக்க வைக்கலாம் என்று விஜய்யிடம் கூறிய பொழுது முதலில் விஜய் யோசித்தாராம் அதன் பிறகு எதற்கும் ஒரு போட்டோ டெஸ்ட் எடுத்து பார்த்துவிடலாம் என்று விஜய் சொன்னாராம்
அந்த போட்டோவை பார்த்த விஜய்க்கு ரொம்ப பிடித்து போய் நானே நடிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். அப்படிதான் பிகில் ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க உருவானது என அட்லி கூறி இருந்தார் இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.