தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களின் படங்கள் வெளிவந்து 300 கோடி ரூ 400 கோடி வசூல் செய்கின்றன. ஆனால் அவர்களுக்கு முதல் 100 கோடியை பெற்ற தந்த திரைப்படம் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக திகழும் இவர் கடைசியாக நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இவர் நடித்த சிவாஜி திரைப்படம் தான் முதலில் 100 கோடி வசூல் செய்தது.
கமலஹாசன் : இளம் தலைமுறை நடிகர்களுக்கு மிகப்பெரிய ரோல் மாடலாக இருக்கும் கமல் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் கடைசியாக நடித்த விக்ரம் படம் 400 கோடி வசூல் செய்தது இவர் நடித்த தசாவதாரம் திரைப்படம் தான் முதலில் 100 கோடி வசூல் செய்தது.
விஜய் : இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படும் இவர் லியோ படத்தை தொடர்ந்து தனது 68 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இவர் நடித்த துப்பாக்கி திரைப்படம் தான் முதலில் 100 கோடி வசூல் செய்தது
அஜித் : படங்களின் மூலம் நல்ல மெசேஜை கொடுத்து வருபவர் அஜித் குமார் இவர் நடித்த ஆரம்பம் திரைப்படம் தான் முதலில் 100 கோடி வசூல் செய்தது.
சூர்யா : வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார் இவர் நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் தான் முதலில் 100 கோடி வசூல் செய்தது.
விக்ரம் : நடிப்பு அசுரன் என அழைக்கப்படும் இவர் தொடர்ந்து ஆக்சன் படங்களில் அதிகம் கவனம் செலுத்து வருகிறார் இவர் நடித்த ஐ திரைப்படம் தான் முதலில் 100 கோடி வசூல் செய்தது.
தனுஷ் : வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் இவர் பாலிவுட்டில் நடித்த Raanjhanaa படம் தான் முதல் 100 கோடி வசூல் செய்தது.
சிம்பு : இரண்டாவது இன்னிசை தொடங்கி வெற்றி படங்களை கொடுத்து வரும் சிம்பு மாநாடு திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது இந்த படம் தான் இவருக்கு முதலில் 100 கோடி வசூலிதத்து.
சிவகார்த்திகேயன் : சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் தொடர்ந்து 100 கோடி வசூல் செய்கின்றன இவர் நடித்த டாக்டர் திரைப்படம் தான் முதலில் 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி : சூர்யாவை தொடர்ந்து சினிமாவில் வெற்றி நடிகராக ஓடும் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் தான் முதல் 100 கோடி வசூல் செய்த திரைப்படம்.
விஷால் : ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்த விஷால் நீண்ட இடைவெளிக்கு பிறகு மார்க் ஆண்டனி படம் தான் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் ஆறு நாள் முடிவுகள் மட்டுமே 66 கோடி வசூல் செய்துள்ளது நிச்சயம் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது. அது நடக்கும் பட்சத்தில் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக விஷாலுக்கு மார்க் ஆண்டனி அமையும்.