தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் அவர். இதை தொடர்ந்து இவர் படங்களை வாங்கி வெளியீட்டும் வருகிறார் அப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது மைகேல் என்ற திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஏற்கனவே சந்திப் கிஷன்னை வைத்து மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ் அதனை தொடர்ந்து இவர்களுக்கு இடையே மிக நெருக்கமான ஒரு நட்பு இருப்பதாக கூறி இருக்கிறார்கள் அந்த வகையில் தன் நண்பனின் படத்தின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அதிரடி சண்டை காட்சிக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் மிரட்டி உள்ளார்கள்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்திப் கிஷன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மதியல் அதிகரித்துள்ளது அதுமட்டுமல்ல இந்த திரைப்படத்தில் ரொமான்ஸ், காதல் காட்சிகள், ஆக்சன் காட்சிகள் என்று எல்லாத்துக்கும் பஞ்சம் இல்லாத அளவிற்கு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்த்து இந்த படத்தின் கதை இதுதான் என்று யூகிக்க முடியாத அளவிற்கு ரொமான்ஸ், ஆக்சன், என அனைத்தையும் கலந்த கலவையாக டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது அந்த வகையில். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதோ மைக்கேல் படத்தின் டிரைலர்