Fire at the bar in Madurai! Mysterious person who escaped: கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. மேலும் இதனைதொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சில நிபந்தனைகளுடன் உயர் நிதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
மேலும் மக்கள் யாரும் அந்த நிபந்தனைகளை பின்பற்றாததால் மீண்டும் உயர்நீதிமன்றம் ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை மதுபான கடைகள் திறக்கப் படமாட்டாது என அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆன்லைனில் மட்டுமே மது விற்பனை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் கடைகளை மூட வேண்டும் என்று போராடிய பொதுமக்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இதனை அவர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகின்றனர்.
மேலும் இதனைதொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் மதுகடைகளை திறப்பதற்காக மேல்முறையீடு செய்யக்கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மதுரையில் உள்ள ஒரு மதுக்கடைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.