தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த பின் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளைக் கண்டு வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் ராட்சசன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து காடன் திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் வெளிவராமல் இருந்தது ஒரு வழியாக சமீபத்தில் FIR திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தை முன்பே பார்த்த நடிகர் தனுஷ் ராட்சசன் போல இந்த திரைப்படமும் நல்லதொரு வெற்றியை விஷ்ணு விஷாலுக்கு கொடுக்கும் என கூறியதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
ஒரு வழியாக இந்த திரைப்படம் முதலில் திரையரங்கில் வெளியாகி பின் OTT தளத்தில் வெளியாகும் என அதிரடியாக கூறியுள்ளார் திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி மூன்று நாட்கள் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது முதல் நாள் இந்த படத்திற்கான வரவேற்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
மேலும் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வெற்றியை ருசித்து ஓடிக்கொண்டிருக்கிறது. FIR திரைப்படம் 3 நாட்களில் மட்டும் சுமார் 4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. FIR திரைப்படத்தின் முழு பட்ஜெட் சுமார் 6 கோடி.
மூன்று நாட்களிலேயே 4 கோடியை அள்ளி உள்ளதால் நிச்சயம் FIR திரைப்படம் இன்னும் இருக்கின்ற நாட்களில் படத்தின் பட்ஜெட்டை விட அதிக கோடிகளை அள்ளி ஒரு லாபகரமான படமாக FIR படம் மாறும் என சினிமா பிரபலங்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.