தற்பொழுது உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் பல கோடி மக்கள் நாள்தோறும் உயிரிழந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது, மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் பொது முடக்கம் ஏற்பட்டுள்ளது. பல கட்டுப்பாடுகளுடனும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் ஏற்பட்டு வருகிறது.
அதோடு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு பல நடிகர், நடிகைகள் போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஊர் ஊராக அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார்கள்
இதனால் தற்பொழுது அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகள், பணம் இருக்கும் மக்கள் போன்ற பலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
ஏனென்றால் தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட படுக்கையறை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா, அஜித், ரஜினி ஆகியோர்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனும் நிதி உதவி வழங்க உள்ளாராம்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.