சினிமாவை பொருத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சில திரைப்படங்கள் மட்டும் திரையரங்குகளில் வெளியாகி தோல்வியை சந்தித்த நிலையில் அதன் பிறகு தொலைக்காட்சிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற ஐந்து திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
பாபா: சுரேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பாபா திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, சுஜாதா, நம்பியார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த வகையில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தோல்வினை சந்தித்த நிலையில் அதன் பிறகு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடம் பிடித்தது.
குணா: சந்தான பாரதி இயக்கத்தில் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் 1991ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரேகா, ரோஷினி, ஜனகராஜ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக தோல்வியை பெற்றது. அதனை அடுத்து கமலின் சிறந்த நடிப்பில் தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
அன்பே சிவம்: வம்சி இயக்கத்தில் கமல் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் படத்தில் மாதவன், கிரண் நாசர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் அன்பே சிவம் என்ற டைட்டிலுக்கு எதிர்மாறாக மிக சாதுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் வெளியாகி தோல்வினை சந்தித்தது மேலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு சூப்பர் ஹிட் பெற்றது.
சுள்ளான்: ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிந்து துலானி, மணிவண்ணன், பசுபதி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் நல்ல கதை அம்சத்துடன் வெளியான இந்த படம் தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றினை கண்டது.
கிரி: சுந்தர் சி இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான கிரி திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் மேலும் ரீமா சென், ரம்யா, வடிவேலு, தேவயானி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் தொலைக்காட்சியில் கிடைத்த வரவேற்பு திரையரங்குகளில் வெளியாகி கிடைக்கவில்லை.