சினிமாவுலகில் சாதிக்க வேண்டும் என வருபவர்கள் படத்தின் கதையை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நடித்தால் போதும் வெற்றி கிடைக்கும். அதிலும் ஒரு சில தவறுகள் நடந்தால் அதை சரியாக கணித்து அடுத்த படத்தில் அந்த தவறை திருத்திக் கொண்டு நடிப்பார்கள் அதனால் அவர்களது திரைப்படம்.
தொடர்ந்து வெற்றியை பெரும் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினி பாணியைப் பின்பற்றி வருகிறார் பெரிதும் கமர்சியல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கமர்சியல் படத்தில் காமெடி, சென்டிமெண்ட் போன்றவை அதிகம் இடம் பெற்று இருப்பதால் மக்கள் மத்தியில் ரொம்ப பிடித்து போய் விடும் பின் அசல்டாக் வெற்றியை ருசிக்க வைத்துவிடும் அதனால் சிவகார்த்திகேயன் படங்கள் வெற்றியை கண்டு வருகிறன.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், டாக்டர் இப்பொழுதுகூட சிபி சக்கரவர்த்தி உடன் கை கோர்த்தது நடித்துள்ள திரைப்படம் டான். இந்தப் படமும் காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் மட்டுமே 40 கோடிக்கு மேல் ஏறி புதிய சாதனை படைத்துள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான டான் திரைப்படம் உலக அளவில் 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் 50 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது விலாவாரியாக ஒரு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள படங்கள் ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான் ஆகிய படங்கள் இருக்கின்றதாம்.