Actress Nayanthara: நடிகையாக மட்டுமல்லாமல் பல தொழில்களில் கவனம் செலுத்தி வருபவர் தான் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அதிக சம்பளம் வாங்கும் பணக்கார நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் நடிப்பது மட்டுமல்லாமல் பல தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
அப்படி சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவ்வாறு நயன்தாரா பல தயாரிப்பாளர்களின் கல்லாப்பெட்டியை நிரப்பி இருந்தாலும் இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
இப்படிதான் படுக்கைக்கு அழைத்தார்கள்.. சூரத் தேங்காய் போல் உண்மையை உடைத்த தேவி பிரியா?
கூழாங்கல்: 2021ஆம் ஆண்டு இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட்டனர். இப்படம் பல அவார்டுகளை வென்றாலும் ஓடிடியில் வெளியானதால் இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதா என்பதே தெரியாத அளவிற்கு போனது.
கனெக்ட்: 2022ஆம் ஆண்டு அஸ்வின் சரவணன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரித்த கனெக்ட் படத்தில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கேர் ஆகியோர்கள் இணைந்து நடித்திருந்தனர். 22 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே உலக அளவில் வசூல் செய்தது.
நெற்றிக்கண்: கண்ணு தெரியாத பெண்ணாக நயன்தாரா நடித்திருந்த நெற்றிக்கண் படம் 2021ஆம் ஆண்டு வெளியானது இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்கி இருந்தார் இப்படமும் படும் தோல்வியை சந்தித்தது.
ராக்கி: 2021ஆம் ஆண்டு வெளியான ராக்கி படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார் ரவுடி பிரக்சஸ் தயாரிப்பில் வெளியான படங்களிலேயே சிறந்த படமாக ராக்கி அமைந்தது. இப்படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா மற்றும் ரவீனா ரவி ஆகியோர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல்: விக்னேஷ் சிவன் தயாரித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் 2022ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா இணைந்து நடித்தனர் இப்படம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில் உலக அளவில் 60 கொடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது.