காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் இயக்குனர்களும் நல்ல நல்ல படைப்புகளை கொடுத்து அசத்துகின்றனர். அப்படி இந்த ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கூட வெளியாகி நல்ல வசூலை அள்ளி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து ஜவான் திரைப்படமும் நான்கே நாட்களில் 400 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது நிச்சயம் இந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி தமிழ் இயக்குனர்கள் எடுக்கும் ஒவ்வொரு படமும் நல்ல விமர்சனத்தை பெறுவது மட்டுமல்லாமல் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது இந்த நிலையில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் இயக்குனர்களின் படங்கள் பற்றிய வாரியாக பார்ப்போம்..
2.0 : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய இந்த திரைப்படம். முழுக்க முழுக்க சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் நிறைந்த ஒரு படமாக இருந்ததால் தமிழையும் தாண்டி இந்திய அளவில் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது ஒட்டுமொத்தமாக 2.0 படம் 700 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் அப்பா மகன் பாசத்தை எடுத்துரைக்கும். தனது மகனை வில்லன்கள் கொன்றுவிட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட ரஜினி உடனே வில்லன்களை பழி வாங்குவார் இதில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் அனைத்தும் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்சை கவர்ந்தது இதனால் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலில் 600 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது.
பொன்னியின் செல்வன் : இதுவரை கதையாக படித்து வந்ததை படமாக எடுத்து மக்களுக்கு ஈசியாக புரிய வைத்தவர் மணிரத்தினம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியானது. முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியாதோடு மட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
ஜவான் : பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உடன் கைகோர்த்து அட்லீ எடுத்த இந்த திரைப்படம் இந்திய அளவில் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம் இதுவரை மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது நிச்சயம் 1000 கோடியை தொட்டு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது