லோ பட்ஜெட்டில் உருவாக்கி கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்த திரைப்படங்கள்.!

low-budget-movie
low-budget-movie

தமிழ் சினிமாவில் பொதுவாக குறைந்த பட்ஜெட் படங்கள் என்றாலே அந்த படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. அதேபோல இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல குறைந்த பட்ஜெட் படங்களும் இந்த ஆண்டு பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அப்படி இந்த ஆண்டு மக்களின் கவனத்தை ஈர்த்த லோ பட்ஜெட் திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

முதலும் நீ முடிவும் நீ:- தர்புகா சிவா இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான முதலும் நீ முடிவும் நீ திரைப்படம் ஜீ 5 ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது. 90களில் நடந்த ஒரு பள்ளி மாணவனின் காதல் கதையாக இந்த படம் உருவானது.

சில நேரங்களில் சில மனிதர்கள்:- இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஜனவரியில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடைசி விவசாயி:- இயக்குனர் எம் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தத திரைப்படம் கடைசி விவசாயி உள்ளது.

டானாக்காரன் :- ஜெய் பீம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் நேரடியாக வெளியானது.

பயணிகள் கவனத்திற்கு:- சக்திவேல் பெருமாள் சாமி இயக்கத்தில் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த திரைப்படம் தற்போது ஆக ஓடிடி தளத்தில் உள்ளது.

லவ் டுடே:- கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே.  இந்த படத்தின் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படமாக உள்ளது.

மேலும் இது போன்ற இந்த ஆண்டு வெளியான பல குறைந்தபட்ச திரைப்படங்கள் உள்ளது. குதிரைவால், சாணி காகிதம், போத்தனூர் தபால் நிலையம், சேத்துமான், o2, மாமனிதன், கார்த்தி, நட்சத்திரம் நகற்கிறது, அனல்மேலே பனித்துளி, கட்டா குஸ்தி, ரத்த சாட்சி. விட்னஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களின் காரணத்தை ஈர்த்த படங்களாக உள்ளது.