தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் டிபி கஜேந்திரன். இவர் திடீரென மறைந்த சம்பவம் சினிமா உலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் மறைந்தாலும் இவருடைய நகைச்சுவையான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு இயக்குனரும் அவர் அந்த வகையில் இவர் இயக்கிய திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
வீடு மனைவி மக்கள்:- விசு, கே ஆர் விஜயா, பாண்டியன், சீதா, எஸ் வி சேகர், நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் தான் வீடு மனைவி மக்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இது ஒரு குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்க ஊரு காவல்காரன்:- ராமராஜன் மற்றும் கௌதமி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி கண்ட திரைப்படம் எங்க ஊரு காவல்காரன் படத்தையும் டிபி கஜேந்திரன் அவர்கள் தான் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டி நாட்டு தங்கம் :- கார்த்திக், நிரோஷா நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாண்டிய நாட்டு தங்கம். இதனைத் தொடர்ந்து எங்க ஊரு மாப்பிள்ளை, தாயா தாரமா, நல்ல காலம் பொறந்தாச்சு, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே மிகக் குறைந்த பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணர்த்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் டிபி கஜேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
அப்போது இயக்குனரும் நடிகருமான அன்பு சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவு எங்களுக்கு அதிர்ச்சையையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது அது மட்டும் அல்லாமல் குறைந்த பொருட்செளவில் பல வெற்றி படங்களை கொடுத்த திரை கலைஞர் கஜேந்திரனின் மறைவு தமிழ் திரைக்கு ஏற்பட்ட பேரழிவாகும் என்று தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடப்பட்டது.