Tamil Movies: இந்திய சினிமாவில் விண்வெளி குறித்து எத்தனை திரைப்படங்கள் வந்துள்ளது என்பது குறித்த பார்க்கலாம். அதாவது சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கு சாதனை படைத்துள்ளது இது குறித்து குடும்பத்தினர்கள் நேரில் மிகவும் ஆர்வமுடன் பார்த்தனர்.
கருப்பு மற்றும் வெள்ளை திரைப்பட காலத்தில் இருந்து விண்வெளிகள் குறித்த படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது எனவே அது குறித்து பார்க்கலாம். இயக்குனர் ஏகாசிலிங்கம் என்பவர் இந்தியாவின் முதல் விண்வெளி படத்தினை இயக்கினார். இந்த படம் தலைக்கரசி என்ற பெயரில் 1963ஆம் ஆண்டு வெளியான நிலையில் எம்ஜிஆர் நடித்திருந்தார்.
மேலும் இவருடன் இணைந்து பி. பானுமதி, ராமகிருஷ்ணா அவர்களும் நடித்த படம் வெளியாகி வெற்றியினை பெற்றது. இருந்தாலும் அப்பொழுது இருந்த மக்களுக்கு இந்த படம் பெரிதாக புரியாத காரணத்தினால் மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
இதனை அடுத்து 1967ஆம் ஆண்டு டிபி சுந்தரம், தாராசிங் ஆகியோர்கள் இணைந்து விண்வெளி குறித்த படம் ஒன்றை தயாரித்தனர் இந்த படம் வெளியானது பலருக்கும் தெரியவில்லை எனவே குறைவாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.
கோய் மில் கயா: ரித்திக் ரோஷன், ப்ரீத்தி ஜிந்தா, பிரேம் சோப்ரா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் கடந்த 2003ஆம் ஆண்டில் வெளியானது. வேற்று கிரகத்து வாசிகள் குறித்து காண்பிக்கப்பட்டிருந்தது இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அண்டாரிக்ஷம் 9000 KMPH: 2018 ஆம் ஆண்டு தெலுங்கு திரைவுலகில் முதன்முறையாக உருவான விண்வெளி திரைப்படம் அண்டாரிக்ஷயம். இந்த படம் மக்களுக்கு சிறந்த கதையை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிலையில் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.
டிக் டிக் டிக்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான டிக் டிக் படம் முழுக்க முழுக்க விண்வெளி குறித்த விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நிலையில் இந்த படமும் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை.
மிஷன் மங்கள்: இந்திய விண்வெளி படத்திலிருந்து அதிக வசூல் பெற்ற படம் மிஷன் மங்கள் தான். இதில் அக்ஷய் குமார், வித்யா பாலன் ஆகியோர்கள் நடித்திருந்த நிலையில் இவர்களைத் தொடர்ந்து தாப்சி, கிருத்தி குல்ஹாரி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.