கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் மாஸ் அப்டேட் அறிவித்த பட குழு.!

sardar
sardar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தய தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

அது மட்டுமல்லாமல் இந்த வந்தய தேவன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி அவர்கள் சர்தார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமிபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த படத்திலிருந்து வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வந்தது அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான சர்தார் பட டீசர் வெளியாகி ரசிகர் மத்தியில் மேலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் சர்தார் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து படக்குழு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது சர்கார் படத்தின் டீசர் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியானது இந்த டீசரில் கார்த்தி அவர்கள் பல தோற்றங்களில் நடித்துள்ளதாக காட்டி இருந்தனர். இந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதாவது சர்தார் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளதாக அதாவது அக்டோபர் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சர்தார் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் தீபாவளிக்கு ஒரு பெரிய பட்டாசு வெடிக்க காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அதே தினத்தன்று சிவகார்த்திகேயனின் பிரிண்ட்ஸ் திரைப்படமும் வெளியாக உள்ளது இதனால் இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.