சிகிச்சை பெற்றுவரும் காமெடி நடிகர் போண்டா மணிக்கு பண உதவி செய்த சினிமா நட்சத்திரங்கள்..! யார் யார் தெரியுமா.?

ponda-mani

சினிமா உலகில் நடிக்கின்ற நடிகர், நடிகைகள் நன்றாக காசு சம்பாதிக்கிறார்கள் என பலரும் மனக்கோட்டை கட்டி வைத்துள்ளனர் ஆனால் உண்மை என்னவென்றால் ஹீரோ ஹீரோயின்களுக்கு மட்டும் தான் அதிகம் சம்பளம்.. குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் காமெடியனாக நடிப்பவர்களுக்கு எப்பொழுதுமே குறைந்த சம்பளம் தான்..

அவர்கள் தொடர்ந்து நான்கு ஐந்து படங்களில் நடித்தால் மட்டுமே ஓரளவு நிம்மதி அடையலாம் இல்லை என்றால் அவர்களது பொழப்பும் திண்டாட்டம் தான். சமீப காலமாக பல காமெடி நடிகர்கள் குணச்சித்திர நடிகர்கள் என பலரும்  பட வாய்ப்பு இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கு தவித்து வருகின்றனர் அதிலும் ஒரு சில நடிகர்கள் மருத்துவமனை செலவுக்கு கூட காசு இல்லாமல் அல்லாடுகின்றனர்.

அந்த வகையில் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து பிரபலம் அடைந்தவர் போண்டாமணி.. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார் அதற்கு காரணம் அண்மையில் ஒரு புதிய படத்தில் சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.

dhanush
dhanush

உடனே அவரை ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் சிகிச்சைக்கு காசு இல்லாமல் பண உதவி செய்யுமாறு பலரிடம் கேட்டுக் கொண்டார் மேலும் அவரது நெருங்கிய காமெடி நடிகர்கள் பலரும் போண்டாமணிக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர் இதனை எடுத்து சினிமா உலகில் இருக்கும் பலர் தற்பொழுது போண்டாமணியின் மருத்துவ செலவிற்கு காசுகளை கொடுத்து வருகின்றனர்.

vijaysethupathy

நடிகர் விஜய் சேதுபதி முதலாவதாக ஒரு லட்சம் கொடுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது அதனை தொடர்ந்து நடிகர் தனுஷும் போண்டாமணிக்கு ஒரு லட்சம் வழங்கி உள்ளாராம். இவர்களை தவிர ஒரு சில நடிகர்கள் உதவி செய்ய ரெடியா இருக்கின்றனர் அந்த வகையில் காமெடி நடிகர் போண்டாமணி உடன் பல்வேறு படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நான் போண்டாமணிக்கு உதவி செய்வேன் என கூறுகிறார்..