நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் சுமாரான வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதால் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் அஜித்குமார் 20 இருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து புதிய கெட்டப்பில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரகனி, நடிகர் வீரா மற்றும் பல பிரபலங்கள் நடித்த வருகின்றனர் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை படகுழு விரைவிலேயே தொடங்கப்படுகிறது.
அதற்கு முன்பாக சிறு கேப் விட்டதால் உடனே அஜித் ஐரோப்பிய நாடுகள் பக்கம் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து பிஎம்டபிள்யூ பைக் உடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வந்தது.
இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது. அஜித் அவர்களோ தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஷூட்டிங் கில் கலந்து கொள்வார் என தெரிய வருகிறது. அஜித் மற்றும் மஞ்சு வாரியரின் காட்சிகள் தான் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது கிடைத்துள்ள ஒரு தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது அதாவது ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் போனி போரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 13ஆம் தேதி போஸ்டர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மேலும் அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிகம் மரியாதை வைத்திருக்கிறார் இவர்கள் இருவரும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.