Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரும் அஜித் வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார் அதற்கான ஷூட்டிங் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது அஜித் தன்னை மட்டும் பற்றி யோசிக்காமல் தன்னுடன் இருக்கும் திறமையானவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் செய்கிறார்.
அப்படி ஜான் கொக்கேன், எஸ் ஜே சூர்யா, முருகதாஸ் என பலரை அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்த்து விட்டார் மற்றும் ஊக்குவித்தும் உள்ளார் அது போலவே தான் நடிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரனையும் ஊக்குவித்தார் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். அப்போது அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சில அட்வைஸும் கொடுத்துள்ளார்.
அதாவது சமூகத்திற்கு தேவையான படத்தை எடுக்க வேண்டும் அதேசமயம் சின்னதற்கு எப்பொழுதுமே ஆசைப்படாதே பெரியதற்கு ஆசைப்படு அப்பொழுதுதான் உன்னுடைய அடுத்தடுத்த லெவலுக்கு செல்ல கரெக்டா இருக்கும் என கூறினார். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களை இயக்கினார்.
பஹீரா படத்தை தொடர்ந்து விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி என்னும் படத்தை எடுத்தார். படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் படத்தில் ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் தற்பொழுது படும் குடும்ப அடியேன்ஸ் மத்தியில் சென்றடைந்தது.
அதனால் படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர் இரண்டு நாள் முடிவில் மட்டுமே 25 கோடி வசூல் செய்துள்ளது. அடுத்த அடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் விமர்சனம் மற்றும் வசூலை பார்த்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியால் எஸ். ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகியவர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார்கள் அதேபோல ஆதிக் ரவிச்சந்திரனும் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். இவர்களுடைய இந்த வெற்றிக்கு அஜித் கொடுத்த ஊக்கம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது மார்க் ஆண்டனி பெரிய வெற்றி படமாக மாறி உள்ளதால் ஆதிர் ரவிச்சந்திரன் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணும் அளவிற்கு உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.