சினிமா பிரபலங்களுக்கு இந்த வருடம் மிக முக்கிய வருடமாக அமைந்துள்ளது பல சினிமா பிரபலங்களுக்கு நல்லது நடந்துள்ளது சில சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டார்கள் சிலருக்கு பட வெற்றி கிடைத்துள்ளது சிலருக்கு புதிய வீடு கிடைத்துள்ளது. என சினிமா பிரபலங்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி வருடமாக இந்த வருடம் அமைந்துள்ளது.
அந்த வகையில் இந்த வருடத்தில் மிக பிரபலமாக பேசப்பட்டது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம்தான். இவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஜூன் 9ஆம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அடுத்தது இவர்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்வார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த வருடத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல செய்தி கூறுவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் எதிர்பார்ப்பின் உச்சமாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார் இது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் இரட்டை குழந்தையா என பலரும் குழப்பத்தில் இருந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு தகவல் கிடைத்தது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த நவம்பர் மாதமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் அதற்கான வேலைகளையும் செய்துள்ளார்கள் இந்த தகவல் பலருக்கும் தெரியாத ரகசியமாக இருந்தது ஆனால் சினிமா பிரபலம் பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா வாடகை தாயின் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்வார்கள் என கூறி இருந்தார் அது போலவே தற்பொழுது நடந்துள்ளது.
வாடகை தாயின் மூலம் நயன்தாரா மட்டும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை இது சினிமா உலகில் புதிதல்ல இதற்கு முன்பு நிறைய பிரபலங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள் அவர்கள் யார் யார் என்ற விவரம் தற்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமீர்கான்- கிரண் ராவ், ஷாருக்கான் – கௌரி கான், சன்னி லியோன் – டேனியல் வைபர், ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ர, பிரீத்தி ஜிந்தா, பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோனஸ் என பல பிரபலங்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.