“கிப்ட்” என்கிற பெயரில் சொகுசு கார் மற்றும் வாட்ச்சிகளை கொடுக்கும் சினிமா பிரபலங்கள்.! இதுவரை நடந்தது

Jailer
Jailer

சினிமா உலகில் தற்பொழுது ஒரு படம் பெரிய ஹிட் அடித்து விட்டால் தயாரிப்பாளர்கள் சந்தோஷத்தில் படத்தில் நடித்த ஹீரோவுக்கும், இயக்குனருக்கும்  விலை உயர்ந்த பரிசுகளை கொடுக்கின்றனர். அதே போல் ஹீரோக்களும் இயக்குனர்களுக்கு மிகப்பெரிய பரிசுகளை கொடுக்கின்றனர். அப்படி பல லட்சம் மதிப்பிலான கார் மற்றும் வாட்ச்களை கொடுத்துள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. 1999 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் வாலி. இந்த படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அஜித்தின் கேரியரின் வளர்ச்சிக்கு மிக பக்கபலமாக வாலி அமைந்தது இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித் எஸ். ஜே. சூர்யாவுக்கு காரை பரிசாக அளித்தார்.

2. உலகநாயகன் கமலஹாசன் பிரம்மாண்ட இயக்குனர்  ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போது கமல் 8 லட்சம் மதிப்புள்ள ஒரு கடிகாரத்தை ஷங்கருக்கு வழங்கினார்.

3.  கமல் இதற்கு முன்பு விக்ரம் படத்தில் நடித்து, தயாரித்தார். அந்த படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மிகப்பெரிய சொகுசு கார் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கினார்.

4. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த கதாபாத்திரம் சூர்யா நடித்த ரோலக்ஸ். அவரை கவுரப்படுத்தும் விதமாக ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை சூர்யாவுக்கு பரிசாக கொடுத்தார் கமல்.

5. உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படம் வெளிவந்து ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றி பெற்றது இதனால் உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

6. ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம்  2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி  வெற்றி நடை கொண்டு வருகிறது இதுவரை மட்டுமே 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. இந்த நிலையில் சந்தோஷமடைந்த கலாநிதிமாறன் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 சீரிஸ் கார் ஒன்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் நெல்சனுக்கு செக் வழங்கியதோடு சொகுசு கார் ஒன்றையும் வழங்கினார்.