சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் காமெடியனாக ஒரு ஓரத்தில் நடித்து வந்த யோகி பாபு. பின் படிப்படியாக வெள்ளித்திரையில் நடிகர்களின் படங்களில் ஓரத்தில் காமெடியனாகவும் வில்லனாகவும் நடித்து இப்படி பயணித்துக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் முழு நேர காமெடியனாக அடி எடுத்து வைத்தார்.
அதன்பின் இவரது சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது தற்போது யோகிபாபு இல்லாத படங்களே இல்லை அந்த அளவிற்கு பல்வேறு நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் என தொடர்ந்து நடித்து வருவதால் யோகிபாபு தொட முடியாத ஒரு உச்சத்தில் இருக்கிறார்.
இதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் சோலோவாக நடித்து அசத்தியுள்ளார். அந்த படங்கள் எதிர்பாராத அளவிற்கு வசூல் வேட்டையும் நடத்தியுள்ளதாக போதும் யோகிபாபு வைத்து படம் பண்ண தற்போது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கியூவில் நிற்கின்றன. இந்த நிலையில் 2021ல் மட்டும் அதிக திரைப்படங்களை தன் வசப்படுத்திய நடிகர்களில் ஒருவராக இவர் இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் யோகிபாபு படப்பிடிப்பு ஒன்றில் அவரது உதவியாளரும், கார் டிரைவருக்கும் இடையே திடீரென பேச்சுவார்த்தை ஆரம்பித்து பின் சண்டையில் முடிந்தது. இதனால் படப்பிடிப்பு அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது மேலும் சண்டை இருவருக்கும் இடையே பெரிய அளவில் நடந்ததால் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
அதிலும் குறிப்பாக உதவியாளருக்கு காயம் அதிகமாக இருந்ததால் குரங்கணி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இச்செய்தி தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது