சென்னையில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில் இந்த மாதிரியான காட்சிகள் தான் எடுக்க போறாங்க.? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் விஜய் 65.?

vijay-
vijay-

தளபதி விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக வெளிநாட்டில் முடித்த கையோடு படக்குழு இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என திட்டம் போட்டது. அதற்கு தயாரிப்பாளரும் படக்குழுவும் ஓகே சொல்ல உடனடியாக படக்குழு சென்னை வந்தது ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனாவின் தாக்கம் இங்கு அதிகமாக இருந்ததால் படக்குழு சூட்டிங் எடுப்பதை நிறுத்தி விட்டது.

இருப்பினும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு எதையாவது ஒரு நல்ல செய்தியை சொல்ல வேண்டும் என்பதற்காக படக்குழு அதிகம் ஆர்வம் காட்டியது அதற்கு ஏற்றார்போல விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்தது மட்டுமல்லாமல் படத்திற்கான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் விதைத்து படக்குழு.

இருப்பினும் முழு படத்தை வெகுவிரைவிலேயே முடிக்க படக்குழு திட்டம் போட்டது அதற்கு ஏற்றார் போல தற்போது சில தினங்களுக்கு முன்பு படக்குழு படத்தில் நடிக்க கூடிய முக்கிய பிரபலங்களை அழைத்து அதற்கேற்றார்போல பூஜா ஹெக்டே மும்பையில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வந்து இறங்கினார்.

தற்போது சென்னையில் மிகப்பெரிய ஒரு செட் போடப்பட்டுள்ளது இங்கே பல காட்சிகள் சூட்டிங் எடுக்கப்பட உள்ளது அதில் முன்னதாக விஜய்யும் பூஜா ஹெக்டே வும் இணையும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது அதன் பிறகு படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒரு மிகப்பெரிய சட்டையை எடுக்க உள்ளது.

கதையின்படி உளவாளியாக வலம்வரும் விஜய் தனது மனைவி மற்றும் மக்களை பயணக் கைதிகளாக வைத்திருக்கும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற விஜய் முயற்சிக்கும் காட்சிகள்தான் இந்த செட்டில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.