தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன். ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக இருந்தாலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பை வெளிப்படுத்துவதால் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இவர் நடிப்பில் வெளியான சமீபகால திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டுப்பர் ஹிட் தான் அந்த வகையில் கடைசியாக வைகுண்டபுரம்லு படமும் நல்ல ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து இவர் “புஷ்பா” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையை மிகப் பெரியது என்பதால் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.இந்த படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளிவந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. மேலும் படக்குழு இந்த படத்தை கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. “புஷ்பா” படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து பகத் பாசில், ரஷ்மிகா மந்தனா போன்றோர் பலரும் நடிக்கின்றனர்.
அந்த காரணத்தினால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் எகிறி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் சண்டை காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் எடிட்டிங் போது அப்படத்தின் காட்சிகள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து புலனாய்வு துறையில் வழக்கு பதிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம் விரைவில் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது இது போன்ற தவறுகள் நடந்தால் படத்தின் வசூலை பாதிக்கும் எனவும் படக்குழு கூறியுள்ளது.