நடுராத்திரியில் அடித்துக்கொண்ட சிவகார்த்திகேயன் மற்றும் பரோட்டா சூரி. வைரலாகும் வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் காமெடி நடிகர் சூரி ஆகியோர் இருவரும் நடுராத்திரியில் திடீரென சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில்  பணியாற்றி வந்தவர் அதன்பிறகு சினிமாவில்  தனுசு உதவியுடன் கால்தடம் பதித்தார் .  மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் .

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பரோட்டா சூரி காமெடியில் கலக்கி இருந்தார். அதன்பிறகு இருவரும் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்கள். தற்பொழுது இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மேலும் இருவரும் குடும்ப அளவில் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது இந்த நிலையில் தற்போது டான் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இரவு நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் கிரிக்கெட் விளையாடி உள்ளார்கள். அப்பொழுது சிவகார்த்திகேயன் அடித்த பந்து 1 பவுண்டரியா அல்லது சீக்ஸ்சாரா என்ற வாக்குவாதம் நடைபெற்றது. அந்த வாக்குவாதத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஈடுபட்டார்கள் அதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.