தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் எத்தனை தடைகள் வந்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு பல ஆண்டுகளாக தற்பொழுது வரையிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமலஹாசன்.
இவருக்கு வயதானாலும் கூட தற்பொழுது உள்ள இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இவர் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
தற்பொழுது கமலஹாசன் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடந்ததால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்பொழுது தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இதனை தொடர்ந்து இத்திரைப்படம் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறும் என்றும் பல காட்சிகள் ரெஸ்டாரண்டில் தான் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.
நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் 15 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் கமலஹாசன் போலீஸ் யூனிபார்ம் அணிந்து போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். அந்த வகையில் இறுதியாக தூங்காவனம் திரைப்படத்தில் போலீசாக நடித்திருந்தாலும் யூனிபார்ம் அணியவில்லை.
அந்தவகையில் இத்திரைப்படத்தில் கமலஹாசன் போலீசாக நடிக்க உள்ளார். இவரை தொடர்ந்து பிரபல நடிகரான பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.