சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் பேவரைட் சீரியல் விரைவில் முடிய இருப்பதாக வெளி வந்த தகவலை பார்த்துவிட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். பொதுவாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு சமீப காலங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் டிஆர்பி-யில் இடத்தை பிடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து சீரியல்தான் பூவே உனக்காக. கடந்த சில வருடங்களாகவே டிஆர்பி-யில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் முதல் ஐந்து இடத்தைப் பிடித்து வருகிறது.
இந்நிலையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் திடீரென இறைவனை உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. பிறகு 10 மணி அளவில் ஒளிபரப்பானது.
இப்படி மீண்டும் ஒளிபரப்பாகும் நேரத்தை மாற்றி 10:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலின் ஹீரோ விலகிய நிலையில் இவரை தொடர்ந்து ஹீரோயினும் விலகினார் இருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வரும் ஜூன் 18ஆம் தேதியுடன் இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சீரியல் இல்லதரசிகள் மற்றும் முதியவர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கூற வேண்டும் இவ்வாறு விரைவில் இந்த சீரியல் மூடி இருப்பதால் பலரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.