அப்பாவின் மறைவு.! கண்ணீருடன் அதர்வா போட்ட ட்வீட்.! தனது பாணியில் ஆறுதல் சொன்ன சேரன்.

murali
murali

80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவர் ஆரம்பத்தில் கன்னட படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் தமிழில் பூ விலங்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் புதுவசந்தம், இதயம் ,அதர்மம் ,பொற்காலம் ,தினந்தோறும் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அதுமட்டுமல்லாமல் அத்தகைய படங்கள் ஹிட் அடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார்.

தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அதன் முலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அமைத்துக்கொண்டு தனக்கு என்ன வருமோ அதனை சிறப்பாக தமிழ் திரைஉலகில் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவர் மாரடைப்பால் 2010ம் ஆண்டு மரணமடைந்தார் இவர் அவரது மகனுடன் இணைந்து பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்தது அவருக்கு கடைசி படமாக அமைந்தது, உன்னுடைய மரணம் தமிழ் சினிமாவுலகை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அதர்வா அவர்கள் நேற்று தனது தந்தையின் பிறந்த நாளை உருக்கமான செய்தி உடன் வாழ்த்துக்களை தெரிவித்தார் பின் அவர் கூறியது நான் அறிந்த காலத்தில் மிக அமைதியான மற்றும் உறுதியான நபர் எனது தந்தை தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா நாங்கள் உங்களை ரொம்ப நேசிக்கிறேன் தினமும் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அத்தகைய பதிவு பார்த்த ரசிகர்கள் அவருக்கு அதர்வா அவர்களுக்கு ஆதரவு கூறினார் மற்றும் முரளிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அதன்பிறகு பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கோரியும் தனது உருக்கமான சில பதிவுகளை வெளியிட்டு வந்தனர் அந்த வகையில் தற்போது சேரன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுயுள்ளார் அதில் அவர் கூறியது நாங்கள் உங்களை மிஸ் பண்ணுகிறோம் சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் சார் உங்கள் சிரிப்பும் உங்கள் அன்பும் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் சார் என்று கூறி உங்களுடைய பாஸ் என்று குறிப்பிட்டார்.

முரளி அவர்கள் சேரன் அவர்களை பாஸ் என்று தான் கூப்பிடுவார்கள் தெரிவித்துள்ளார் மறைந்த நடிகர் முரளி சேரன் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.