80 – களில் தனது பயணத்தை ஆரம்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது வரையிலும் நம்பர் ஒன் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். இப்போது நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ரஜினி தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இவரது படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி நடிகர்களே அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம் ஆம் தமிழ் சினிமா உலகில் இப்பொழுது உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் ரஜினியை தான் ரோல் மாடலாக வைத்து நடிக்கின்றனர். அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகன் என்று சொல்லிக்கொண்டு ஓடும் விஜய்.. சம்பள விஷயத்தில் ரஜினியை ஓவர் டேக் செய்து போய்க் கொண்டிருக்கிறார்..
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது அது குறித்து பார்ப்போம்.. பாபா படம் வெளிவந்த சமயத்தில் அந்த படம் ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வியையும் கெட்ட பெயரையும் உருவாக்கியது அந்த சமயத்தில் தோல்வியை கொண்டாடும் வகையில் பல நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பார்ட்டி வைத்து கொண்டாடியது..
நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த பார்ட்டியில் நடிகர் விஜயும் அவரது அப்பாவும் இதில் உண்டு என செய்யாறு பாலு கூறினார். இந்த செய்தி எல்லாம் ரஜினிக்கு ரொம்ப வருத்தத்தை கொடுத்ததாம் மேலும் ரஜினியின் அடுத்த படமான சந்திரமுகி படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது அதே சமயத்தில் விஜயின் படங்கள் தோல்வி படங்களாக இருந்ததால் இனி வேறு வழி இல்லை என நினைத்து சந்திரமுகி படத்தின் வெற்றியை பாராட்டி பேசினார் விஜய்.
ஆனால் அதன் காரணமாய் இப்பொழுது விஜய் குடும்பத்தில் விதி விளையாடி வருகிறது, மகன் மிகப் பெரிய நடிகனாக மாறி 120 கோடி சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் விஜய்க்கும் சந்திரசேகருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர் சந்திரசேகர் பெயரை கேட்டாலே கோபம் வரும் அளவிற்கு விஜய் வந்துவிட்டார். மேலும் சில விஷயங்களையும் செய்யாறு பாலு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.