தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விக்ரம் இவர் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு மட்டுமல்லாமல் படத்திற்காக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சமீப காலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தற்போது வெற்றிக்காக துடித்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது அவர் கோப்ரா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை தொடர்ந்து சியான் 60 என்ற திரைப்படத்தில் புதிதாக கமிட்டாகியுள்ளார் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்குகிறார். மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் இப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்தைப் பற்றி கூறியுள்ளார் அவர் கூறியது.
சியான் 60 திரைப்படம் திட்டமிட்டு நடந்தது அல்ல ஒரு நாள் எதர்ச்சியாக விக்ரம் சார் பிராஜக்ட் ஏதாவது இருந்தா பண்ணலாம் என கேட்டார். அதன்பின் அவரை நான் சந்தித்து பல கதைகளை கூறினேன். இறுதியாக ஒரு படத்தின் கதையை உறுதி செய்தார்.இன்னும் அப்படத்தின் கதையை நான் முழுமையாக எழுதி முடிக்கவில்லை என்றும் மேலும் கூறி நம்மை அதிர்ச்சி அடையசெய்தார்.