விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சிகள் இந்த முறை மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அதில் 11 பெண் போட்டியாளர்களும், 9 ஆண் போட்டியாளர்களும் மற்றும் ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டனர். இதன் காரணமாக முதல் இரண்டு வாரங்களிலேயே ஏராளமான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் நான்கு போட்டியாளர்கள் வெளியாகி 17 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனின் முதல் எலிமினேட்டாக சாந்தி மாஸ்டர் வெளியேறினார். மூன்றாவது வாரம் அசல் கோளாறு, கடந்த வாரம் செரினா ஆகியோர்கள் எலிமினேட்டான நிலையில் இவர்களை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், விக்ரமன், மகேஸ்வரி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, ஏடிகே ஆகியோர்களின் பெயர் இடம் பெற்று இருக்கிறது.அ சற்றுமுன் வரையிலும் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்த ராம் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என நெட்டிசன்கள் எதிர்பார்த்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய கணிப்பு தவறாக போய்விட்டது.
அதாவது இந்த வாரம் இந்நிகழ்ச்சியில் நூல் இழையில் ராம் ராமசாமி எலிமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கிறார் மேலும் இந்நிகழ்ச்சியில் இருந்து மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். மேலும் இந்த வாரம் தான் ராம் தன்னுடைய விளையாட்டை விளையாட ஆரம்பித்து இருக்கிறார் எனவே இதற்கு மேல் இனிவரும் நாட்களில் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.