தல அஜித்தை சந்தித்த ரசிகர்கள் – லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட புகைப்படம்.! எப்படி இருக்கிறார் பாருங்கள்.

ajith
ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களையே தேர்ந்து எடுத்து நடித்தார். அதன் மூலம் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அக்ஷன் படங்களில் இவர் நடித்து வெற்றி பெற்றதால் ஒருகட்டத்தில் பெரிதும்  ஆக்சன் படங்களையே விரும்பி நடித்தார். இவர் எந்த மாதிரி படம் நடித்தாலும் இவரது ரசிகர்கள் ஒருபோதும் இவரை விட்டுக்கொடுப்பதில்லை. ரசிகர்களுக்காக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை சமிபகாலமாக  கொடுத்து அசத்துகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தை எச் வினோத் இயக்கி வர போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்தது போஸ்ட் புரோமோஷன் வேலைகள் நடைபெற்று இருக்கின்றன. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தல அஜித் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.