சிம்புவின் புதிய லுக்கை பார்த்து அடுத்த படத்துக்கான கெட்டப்பா எனக் கேட்டுக்கும் ரசிகர்கள் – செம்ம மாஸா.. செம்ம சீன்னா இருக்கும் புகைப்படம்.

simbu

சினிமா உலகில் ஒவ்வொருவரும் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் பொழுது தன்னை மாற்றிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் நடிகர் சிம்பு சிறிய இடைவெளிக்குப் பிறகு சினிமா துறையில் மீண்டும் புதிய அவதாரம் எடுத்து நடித்து தொடர் வெற்றிகளைக் கண்டு வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் வெங்கட் பிரபுவுடன் இந்த மாநாடு என்ற திரைப்படத்தில் பணியாற்றினார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது அதோடு மட்டுமல்லாமல் 100 கோடியை வசூல் வேட்டை நடத்தியது இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் நடிப்புவின் நடிப்பு மற்றும் வசனங்கள் போன்றவை சிறப்பாக அமைந்தன.

படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்த நடித்ததால் இந்த படம் வேற லெவல் இருந்தது மேலும் சிம்பு கேரியரில் இது மிக முக்கியமான படமாக தற்போது பார்க்கப்படுகிறது அதனை தொடர்ந்து சிம்பு கையில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற பல்வேறு திரைப்படங்களில் இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் நிறைவேறி இது வெகு விரைவிலேயே வெளியாக ரெடியாக இருக்கிறது இதனை தொடர்ந்து நடிகர் பத்து தல படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு அந்த படத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இப்போது சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இது பத்து தல படத்திற்கான லுக் எனில் சிறப்பாக இருக்குமே என கூறி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் செம்ம சூப்பராக இருக்கும் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.

simbu
simbu