தமிழ் சினிமா உலகில் ஏராளம் திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் நாடு முழுவதும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தல அஜித் இவர் சென்ற வருடம் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான போது வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.
மேலும் இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்து டெல்லியில் நடக்கப்போவதாக தகவல் ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
நாளாக நாளாக வலிமை திரைப்படத்தைப் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் இணையதளத்தில் வெளிவருமா என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் படக்குழுவினர்களை சார்ந்த பலரிடமும் ரசிகர்கள் அப்டேட் எப்போது வெளிவரும் என கேட்டு வருகிறார்கள்.ஆனாலும் அவர்களுக்கு சரியான தகவலை வலிமை படக்குழு ரசிகர்களுக்கு கொடுப்பதில்லை.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயாவிடம் தல ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என கேட்டபோது அதற்கு அவர் கூடிய சீக்கிரம் வெளிவரும் என அந்த ரசிகர்களுக்கு கூறியுள்ளார் மேலும் அப்போது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காணொளியை பார்த்த ஒரு சில ரசிகர்கள் கூடிய சீக்கிரம் வலிமை திரைப்படத்தின் அப்டேட் வெளிவரப் போகிறது என உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதோ அந்த வீடியோ காணொளி.
#Valimai #AjithKumar pic.twitter.com/jgVJwiWf1s
— maharasan1960 (@maharasan1960) January 8, 2021