விடாமல் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கும் ரசிகர்கள்..! மனம் நொந்துபோன பாக்கியலட்சுமி நேஹா..!

neha-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு சன் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பப்பட்ட ஒரு சீரியல் தான் வாணி ராணி என்ற சீரியல் ஆகும்.

இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியல் ஆனது இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் மேலும் இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடிகை ராதிகா நடித்து கெத்து காட்டியது மட்டுமில்லாமல் அவரேதான் இந்த சீரியலில் தயாரித்திருந்தார்.

சுமார் ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பான இந்த சீரியல் ஆனது பல்வேறு சாதனை பெற்று உள்ளது அந்த வகையில் இந்த சீரியலில் வாணி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு 2 மகன்களும் ஒரு மகளும் நடித்திருப்பார்கள் அந்த வகையில் இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவருடைய மனதையும் கவர்ந்தவர் தான் தேனு.

ஆனால் இவருடைய உண்மையான பெயர் நேகா இவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரிலும் நடித்து வருகிறார் என்பது அந்த வகையில் இவருக்கு தற்போது வெறும் 19 வயதுதான் ஆகிறது இந்நிலையில் நமது நடிகை தன்னுடைய அம்மாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூகவலைத்தள பக்கத்தில் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்து பலரும் வாழ்த்து சொன்னாலும் ஒரு சிலர் இதனை பார்த்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.  அந்த வகையில் விமர்சனம் செய்யும் ஒருசிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீங்கள் விமர்சனம் செய்வதால் நான் கவலைப்பட போவதில்லை உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கூறி உள்ளார்.

neha-1
neha-1

அதே போல அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களுடைய எடை என்ன என கேள்வி எழுப்பி இருந்த நிலையில்  அதற்கு அவசரப்பட்டு உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என பேசியுள்ளார். அது மட்டும் இல்லாமல் வெகு நாளாக இந்த கேள்வியை ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

neha-1