சின்னத்திரை டிவி சேனல்கள் பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சியாக இருந்து வருகின்றன. இது தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவு பெற்ற நிலையில் 6வது சீசன் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன.
இதில் ஒவ்வொரு சீசனும் மக்கள் பலருக்கும் மறக்க முடியாத ஒரு சீசனாக இருக்கும் அந்த வகையில் கடந்த ஐந்தாவது சீசன் மக்கள் பலரையும் நல்ல என்டர்டைன்மென்ட் செய்தது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தாமரைச்செல்வி இவரை பலரும் நினைவில் வைத்திருப்பார்கள்.
அந்த அளவிற்கு இந்த சீசனில் படும் பிரபலம். இவர் மேடை நாடக கலைஞர் ஆனால் வெளியுலகம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத பெண் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மிகவும் வெறித்தனமாக நடந்து கொண்டார் பின்பு போகப் போக பல விஷயங்களை தெரிந்துகொண்டு சிறப்பாக தனது யுக்தியை பயன்படுத்தி விளையாடினார்.
இருந்தாலும் அப்போது அவரது பணிவு அடக்கம் போன்றவற்றை சிறப்பாக கடைப்பிடித்து வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பைனல் சென்றார் இதைத்தொடர்ந்து தற்போது பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் நடனமாடி சிறப்பித்து வருகிறார் இந்த நிலையில் இவர் குறித்து சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழும்பி வருகின்றன.
அந்தவகையில் தாமரையின் எளிமை மற்றும் இயல்பான பேச்சு போன்றவற்றின் மூலம்தான் அவருக்கு பல ரசிகர்கள் உருவாக்கினார் ஆனால் இப்பொழுதெல்லாம் தாமரை ஓவர் பந்தா காட்டுகிறார் மேக்கப் அதிகம் போட்டு ஆளே மாறிப் போய் விட்டார் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரை வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.