கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து அதில் வெற்றி கண்டு வருகிறார். அது ரஜினி, தனுஷை வெகுவாக கவர்ந்தது. அதன் காரணமாக ரஜினி இவருடன் முதல் முறையாக கூட்டணி வைத்து பேட்ட என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்ததை தொடர்ந்து அடுத்ததாக தனுஷுடன் இணைந்து தற்போது “ஜகமே தந்திரம்” என்ற gangster படத்தை எடுத்து உள்ளார்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்த நிலையில் ரஜினி அண்ணாத்த படத்தை முடித்த கையோடு சென்னைக்கு வந்தார் சென்னை வந்ததும் அவருக்காக தனியாக ஜகமே தந்திரம் படத்தை போட்டு காண்பித்தனர் படத்தை பார்த்த ரஜினி இதுவரை இல்லாத அளவிற்கு இந்த கேங்க்ஸ்டர் படம் இருக்கிறது என கூறினார்.
இது தனுசுக்கு மேலும் ஒரு ஹிட் படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என கூறி கார்த்திக் சுப்புராஜை கட்டித் தழுவினார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் தாறுமாறாக எகிறியது இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்தால் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துவதோடு ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவரும் என எதிர்பார்க்கபட்டது.
ஆனால் அதற்குள் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சசி ஸ்ரீகாந்த் அவர்கள் இதை OTT தளத்திற்கு கொடுத்தார் இதனால் தனுஷ் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளானார். என் என்றால் தனுஷ் இந்த திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வைத்திருந்தார். ஆனால் இது எதிர்பாராதவிதமாக OTT இணையதளத்திற்கு சென்றால் தனுஷ் இந்த படத்தை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் தனது சமூகவலை தளத்தில் வெளியிடாமல் மௌனமாக இருக்கிறார்.
இப்படி இருக்க இந்த படத்தின் கதை இதுவாக இருக்கும் என்பது போல ஒரு கதை ஒன்று வெளியாகி உள்ளது : அதாவது நடிகர் தனுஷ் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார் அங்கு திடீரென ஒரு பிரச்சினை நடக்கிறது அதற்கு தீர்வு அன்று இரவு காண்கிறார் எல்லாத்தையும் அடித்து துவைத்த தனுஷை பலரும் டான் டான் எனக்கூற அங்கு பிரபலமடைய இப்படி இருக்க வெளிநாட்டில் ஒரு இடத்தை இரண்டு கும்பலுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை நடக்கிறது.
அதில் ஒரு கும்பல் சென்னையில் மிகவும் பிரபலமடைந்த டன்களை வ சொல்கின்றது. அதில் ஒருவராக தனுஷும் இடம்பெற்று வெளிநாட்டிற்குச் சென்று அந்த பிரச்சனையை தீர்த்து வைத்து அங்கு மிகப்பெரிய டான்னாக மாறி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் இதுவே இந்த திரைப்படம் என கூற வருகிறது அதற்கு ஏற்றார் போல இந்த படத்தின் டீசரும் இருப்பதால் கதை இதுவாக இருக்கும் என தற்போது கற்பனைக்கோட்டை செய்து உள்ளனர் ரசிகர்கள்.