துணிவு படத்தை பார்க்க கதவை உடைத்து சென்ற ரசிகர்கள்.! அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்…

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்போது ஹெச் வினோத் உடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் நேற்று வெளியானது. வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் அடித்துக் கொண்டிருந்த நிலையில் ரிலீஸ் ஆன பிறகும் விட்டு வைக்கவில்லை அந்த அளவிற்கு ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக படத்தைப் பார்த்தார்கள்.

அது மட்டுமல்லாமல் அஜித் படத்தை பார்க்க சென்ற 19 வயது வாலிபர் நேற்று விபத்தில் உயிரிழந்தார் இந்த சம்பவம் அங்குள்ள ரசிகர்களை சிறிது நேரம் பதட்டமடைய வைத்துள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் அஜித்குமார். இதனால் துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர்களுடைய எதிர்பார்ப்பில் உருவான துணிவு திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் ஷோவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் முதல் ஷோவை பார்க்க டிக்கெட் கூட இல்லாமல் ரசிகர்கள் வெளியவேதான் இருந்தார்கள். இந்த நிலையில் டிக்கெட் பெற்றுக்கொண்ட சில ரசிகர்கள் தியேட்டர் உல் செல்லும் போது பாதுகாவலர்கள் இருக்கும் நிலையில் மூடி இருந்த கதவை உடைத்து சென்றுள்ளனர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

வெளியான முதல் நாலே எவ்வளவு சம்பவம் நடந்திருக்கிறது என்றால் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இதற்கு அப்புறம் ரசிகர்கள் இந்த மாதிரி செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.