அப்டேட் கேட்ட ரசிகர்கள்.! உங்களுக்காக சூர்யாவை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறேன்.! மனம் திறந்த பாண்டியராஜ்.

pandiyaraj

சினிமா திரை உலகில் கமர்சியல் படங்களை எடுப்பதில் கெட்டிக்கார இயக்குனராக இருப்பவர் பாண்டியராஜ் இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடை குட்டி சிங்கம் கார்த்திக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது கார்த்தி கேரியரில்  திரைப்படமாகவும் அமைந்தது.

மேலும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்தனர். இதனைத் தொடர்ந்து பாண்டிய ராஜ் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி  வருகிறார் இந்த படத்தையும் சூர்யா ரசிகர்கள் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு இன்சாக சீன் பை சீனாக செய்து வருகிறார். ஆனால் நிச்சயம் இந்த திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு பெஸ்ட் திரைப்படமாக இருக்குமென பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் தம்பி கார்த்திக் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் சூர்யா உடன் இணையும் படத்தின் அப்டேட்களை சிலவற்றை தாருங்கள் என கூறி என்னை சந்தோஷப் படுத்தி உள்ளனர் நிச்சயம் அவர்களுக்காக மிகப்பெரிய ஒரு ட்ரீட் நான் கொடுத்து இருக்கிறேன் சற்று பொறுமையாக இருங்கள் படம் விரைவில் வந்து உங்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும்.

சூர்யாவின் இந்த படத்திற்காக டைட்டிலில் தொடங்கி இன்ச் பை இன்ச்சாக நான் செதுக்கி வருகிறேன் ஒரு சீன் கூட ரசிகர்கள் வேஸ்ட் ஆகக்கூடாது என்பதால் என்ஜாய் பண்ணி எடுத்து வருகிறேன் என பதிவிட்டார்.

pandiyaraj
pandiyaraj

இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக ரத்தினவேல்,இசை அமைப்பாளராக இமான் பணிபுரிகிறார்கள் மேலும் சத்யராஜ், பிரியங்கா, மோகன் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.