aarav marriage video: விஜய் டிவியில் ஆண்டுதோறும் சிறப்பான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது அப்படி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சிசனையும் அது ஒளிபரப்பு செய்தது இந்த சீசனின் ஆரம்பத்தில் எப்படி இருக்கும் என ரசிகர்கள் சற்று குழம்பி போய் இருந்தாலும் அது சிறப்பாக மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்தது விஜய் டிவி.
இது பலருக்கும் பிடித்து போனதால் பிக்பாஸில் போட்டியாளராக இருந்த பிரபலங்கள் பலரும் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தனர். அதிலும் குறிப்பாக டைட்டில்லை வென்ற ஆரவ் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தோடு மட்டுமில்லமால் வெள்ளி திரையில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியது.
அந்தவகையில் வெள்ளித்திரையில் இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ராஜபீமா மற்றும் மீண்டும் அருகில் வா எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படி சினிமா உலகில் தற்பொழுது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் திடீரென நடிகை ராஹி என்பவரை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைபடங்கள் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது அவர்களின் திருமண வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த திருமண வீடியோ.