மாநாடு திரைப்படத்தை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள் – வெளிவரும் கமெண்ட்டுகளை நீங்களே பாருங்கள்..

maanaadu
maanaadu

தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனது பயணத்தை தொடர்ந்திலிருந்து தற்போது வரையிலும் பல்வேறு சூப்பரான திரைப்படங்களை கொடுத்து மக்களை கவர்ந்தவர் நடிகர் சிம்பு. இருப்பினும் சமீப காலமாக இவரது திரைப்படங்கள் பெரிய அளவு வெளிவரவில்லை மேலும் ஹிட்டடிக்வில்லை.

அதை உணர்ந்து கொண்ட நடிகர் சிம்பு தொடர்ந்து தற்போது படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு உடன் கைகோர்த்து “மாநாடு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி இன்று வெளியாகியுள்ளது. இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார்.

மாநாடு திரைப்படம் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு படம் நகர்கிறது. படத்தின் டிரைலர் டீசர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் புக்கிங் டிக்கெட் விற்று தீர்ந்தது தற்போது முதல் காட்சியை போய்க்கொண்டிருக்கிறது படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை பாதி படம் தான் முடிந்துள்ளது அதற்குள்ளேயே ரசிகர்கள் படத்தைப் பார்த்துவிட்டு தனது கருத்துக்களை அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். சிம்புவின் கேரியரில் இது ஒரு வித்தியாசமான திரைப்படம் படம் செம சூப்பராக வந்துள்ளது படம் சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறது மாநாடு என கூறியுள்ளனர் மேலும் மாநாடு வேற மாதிரி செம தெறி மாஸ் என கூறியுள்ளனர்.

ஃபர்ஸ்ட் ஆள் செம மாஸ் செம சீன் என கூறி கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மத்தியில் மாநாடு நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்தடுத்து தற்போது டிக்கெட்டுகள் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது மேலும் முதல் நாள் மட்டுமே இந்த திரைப்படம் பல கோடிகளை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.