நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அப்டேட் ஏதாவது வருமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோவை வெளியிட்டது சன் பிக்சர் நிறுவனம்.
இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கு பிரபலமாகி வைரலானது அதுமட்டுமில்லாமல் 180 மில்லியனுக்கும் மேற்பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த அரபி குத்து பாடலை அனிருத் இசையமைத்திருந்தார் சிவகார்த்திகேயன் பாடலை எழுதியிருந்தார். மேலும் அனிருத் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து இந்த பாடலை பாடி இருந்தார்கள்.
இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அதுமட்டுமல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நடனமாடி வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சம்யுக்தா, சமந்தா, பூஜா ஹெக்டே, யாஷிகா ஆனந்த் என அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் 2வது சிங்கிள் டிராக் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அப்படி இருக்கும் வகையில் தற்போது திரைப்படத்தில் அரபிக் குத்து பாடலை பாடிய ஜோனிட காந்தி தற்பொழுது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் அதிக வெயிட் போட்டு தூக்குகிறார் இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரளாகி வருகிறது இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் பாட்டு பாடுவதால் தான் நீங்கள் பேமஸ் என்று நினைத்தால் அதை விட இதில் அதிக பேமசா இருப்பீர்கள் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.