அஜித்தின் புதிய முடிவால் திக்குமுக்காடிப் போன ரசிகர் கூட்டம்.. இனி போலிஸ் – ரவுடி கதாபாத்திரத்திற்கு வேலையே கிடையாது.?

ajith
ajith

நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் அந்த படங்களில் சமூக அக்கரை உள்ள கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களும் அஜித் படத்தை பார்த்து கொண்டாடுகின்றனர். அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது அஜித்தின் வலிமை திரைப்படமும்..

ஆக்ஷன் சென்டிமெண்ட் போன்ற சீன்கள் அதிகமாக இருந்தாலும் சமூக அர்த்தமுள்ள சில கருத்துக்களை வைத்துள்ளார் இருந்தது  வெளியாகி ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் ஹச். வினோத்துடன் தனது 61 வது இந்தப் படத்தில் அஜித் நடிக்கிறார்.

இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு  அதிரடியாக உடல் எடையைக் குறைத்திருக்கிறார் அஜித் ஒரு பக்கம் இருக்க.. தனது 62வது திரைப்படத்திற்கான இயக்குனரையும் அஜித் ஒரு வழியாக தேர்வு செய்துள்ளார் அந்த வகையில் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் உடன் முதல் முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் ஒரு புதிய முடிவை எடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அண்மைக்காலமாக அஜித் நடிக்கும் படங்களில் அவரது கதாபாத்திரம் பெரிதும் போலீஸ் மற்றும் ரவுடி கதாபாத்திரங்களாகவே இருந்து வருவதால் அதிலிருந்து தற்போது தன்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்.

இனி போலீஸ் – வில்லன் கதாபாத்திரம் இல்லாமல் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் ஒரு சாமானிய மனிதனாக அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் இதுபோன்ற படங்களில் அஜித் நடித்தால் அவரது திறமையையும் அதிக அளவில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் எப்படி நடித்தாலும் அந்த திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என கூறப்படுகிறது. அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார் இந்த படத்தில் அஜித் ஒரு கிராமத்து இளைஞராக நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.