திரை உலகில் இருக்கும் நடிகர்கள் நல்ல படங்களை கொடுத்தாலும் முதலிடத்தை பிடிப்பது யாரோ ஒருவர் தான். அவர்கள் போன பின்பு அந்த இடத்தை இன்னொருவர் நிரப்புவது காலம் காலமாக நடந்து வருகிறது அதே போல தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இடத்தை பிடிக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.
அந்த லிஸ்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர் இது குறித்து அண்மையில் அவரிடமே கேட்ட போது அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை என கூறியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் இப்பொழுது இவர் சோலோ மற்றும் டாப் ஹீரோயின் படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றியை மட்டுமே கண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்.
இப்பொழுது கூட இவர் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் வெகு விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இவர் சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது கொரோனா தொற்றுக்கு பிறகு எனது மூன்று படங்கள் OTT யில் ரிலீஸ் ஆக்கின.
ஆனால் இப்பொழுது நான் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. OTT பிளாட்ஃபார்ம்களின் அதிகத்திற்கு பிறகு சிறிய பட்ஜெட் படங்களை ரசிகர்கள் திரையரங்கில் பார்ப்பதில்லை இதனால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் தரமாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் அதன் தரம் குறையவில்லை ஆதரவும் குறையவில்லை என கூறினார். டிரைவர் ஜமுனா திரைப்படம் ஒரு வித்தியாசமான திரைப்படம் நிச்சயம் இது அனைவருக்கும் பிடிக்கும் என கூறினார் மேலும் எனக்கு கார் ஓட்ட பிடிக்கும் இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நானே கார் ஓட்டி இருக்கிறேன் என கூறினார்.