அமெரிக்காவில் இப்படி ஒரு விளையாட்டா..? ரகுல் பிரீத் சிங் ஆட்டத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

rakul-preet-singh
rakul-preet-singh

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் தெலுங்கு என தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டி வருகின்றது மட்டுமில்லாமல் தற்பொழுது ஹிந்தி திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பினை வெளிக்காட்டி வருகிறார்

என்னதான் இவர் பல மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டி வந்தாலும் இவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் என்ற திட்டத்திற்கு  தெலுங்கானா மாநிலத்தில் தூதராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன்முதலாக கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு கில்லி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நமது நடிகை தன்னுடைய கல்லூரி படிப்பின் பொழுதே மாடல் செயலில் அதிக ஆர்வம் கொண்டவர்.

அந்த வகையில் நமது நடிகை பிரமீனா மிஸ் இந்தியா அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தை பெற்று மிகப்பெரிய  வரவேற்பு பெற்றார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவர் முதன்முதலாக தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து எம் ஜி கே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இவர் பல்வேறு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவர் பிரபலமானது எனவோ  கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் தான்.

அந்த வகையில் நமது நடிகை சமீபத்தில் ஜாக்கி வாசுதேவ் உடன் கோல்ப் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது இவ்வாறு நடந்த அந்த விளையாட்டு ஆனது அமெரிக்கா நாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!