விஜய் ஆண்டனி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இசை அமைப்பாளராக பயணித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். ஹீரோவாக அறிமுகமான பின்பு தனது திறமையை வெளிக்காட்ட தொடங்கினார்.ஹீரோவாக ஒருபக்கம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க மறுபக்கம் இவரது மனைவியை வைத்து படங்களை தயாரித்தும் அசத்தி வருகிறார்.
இதுவரை அவர் தேர்ந்தெடுத்த பெரும்பாலான படங்கள் வெற்றியை ருசித்து உள்ளதால் இவரது படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.அதில் ஒருசில படங்கள் வெளியாக இருக்கின்றன.அக்னி சிறகுகள், காக்கி, கொலை, தமிழரசன், பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கோலிசோடா படத்தை இயக்கி வெற்றி கண்ட மில்டன் உடன் கைகோர்த்து மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் விஜய் ஆண்டனியின் நண்பராக சரத்குமார் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்கள் இருவரும் இதுவே முதல் முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.