சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா இவர் இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் சீரியல்களில் நடித்துள்ளார்.
என்னதான் இவர் பார்ப்பதற்கு அழகாகவும் கதாநாயகி போன்ற முகத்தோற்றத்தை கொண்டிருந்தாலும் இவர் எதிர்மறையான வேடத்தில் நடித்து தான் ரசிகர்களை கவர்ந்தார். அந்தவகையில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்த சக்கர ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நீலிமா ராணி பொதுவாக மற்ற கதாநாயகிகள் செய்யும் வேலையை தானம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இணையத்தில் தன்னுடைய அழகான புகைப்படத்தை பதிவிட்டு வரும் நீலிமா தற்பொழுது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விஷயத்தை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். நீலிமாவின் கணவர் தன்னைவிட 12 வயது மூத்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் தன்னுடைய பதிமூன்றாம் ஆண்டு திருமண நாளை நீலிமா கொண்டாடியுள்ளார்.
அத்துடன் வருகின்ற 2022ஆம் ஆண்டு தங்கள் வீட்டில் ஒரு குழந்தையின் சத்தம் கேட்க போகிறது எனவும் சமூகவலைதளத்தில் தெரிவித்தது மட்டுமல்லாமல் தன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அபிஷேக்கின் முன்னால் மனைவி உருக்கத்துடன் போட்ட பதிவு.!