தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இசையமைப்பாளர் அனிருத் இவர் சிறுவயதிலேயே சினிமாவில் இசையமைக்க ஆரம்பித்து விட்டார் அதன் பிறகு பல திரைப்படங்களில் இசை அமைத்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் இசையமைத்த படங்கள் எல்லாமே ஹிட் அடித்தது அதேபோல் இவர் இசையமைக்கும் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அப்படி இவர் இசையமைத்து வரும் ஒவ்வொரு பாடல்களையும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இசையமைத்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்து உள்ளார். அதிமட்டும் அல்லாமல் ஒவ்வொரு நடிகருக்கு எப்படி பிஜிஎம் போட்டால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்ற நுணுக்கத்தையும் அறிந்து கொண்டுள்ளார். மேலும் அவர் போடும் பிஜிஎம் ஐ அவருடைய ரசிகர்கள் ட்ரெண்டாக்கி விடுகிறார். அதே போல் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர்.
இந்த திரைப்படத்தில் இறுதியில் வரக்கூடிய செல்லம்மா செல்லம்மா என்ற பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த பாடலை ஒரு நிகழ்ச்சியில் அனிருத் மற்றும் ஜோனிட ஆகிய இருவரும் பாடி கொண்டிருக்கும் போது அனிருத் அவர்கள் ஜோனிடாவை தெரியாமல் மறைத்துவிடுவார் அப்போது ரசிகர் ஒருவர் டே அனிருத் எட்ட போடா என்று அனிருத்தை பார்த்து சொல்லி உள்ளார்.
இதை அனிருத் கண்டுகொள்ளாமல் அவர் பாடியதுதான் ஹைலைட். அது மட்டுமல்லாமல் ஜோனிடாவை பார்ப்பதற்காக ரசிகர்கள் இப்படி ஏங்கிப் போய் இருக்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
ade bunde 😭 pic.twitter.com/jFYCj3j1fb
— v/be (@muttonnbiriyani) September 21, 2022