தளபதி 66 படத்தின் அப்டேட்டை கேட்க பயப்படும் ரசிகர்கள் – தரமான சம்பவம் செய்த நடிகர் சரத்குமார்.?

vijay
vijay

தளபதி விஜய் மாஸ்டர், பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66வது திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சம்பந்தப்பட்ட ஒரு படமாக இது உருவாகும் என தெரிய வருகிறது இந்த படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

தளபதி 66 திரைப்படம் அடுத்த வருடம் 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே வெளியாகும் என படக்குழு அதிரடியாக கூறி உள்ளது. படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார் வித்தியாசமான கதை களத்தில் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான வரும் ஜூன் 22ம் தேதி அன்று வெளியிட உள்ளது.

ஆனால் அதற்குள்ளேயே அவசரம் பொறுக்காமல் ரசிகர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களை சந்தித்தால் போதும் படம் குறித்து கேட்டு வருகின்றனர் அப்படி அண்மையில் தளபதி 66 படத்தில் நடித்து வரும் நடிகர் சரத்குமாரை சந்தித்து செய்தி வாசிப்பாளர்கள் நீங்கள் இந்த படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் எப்படிப்பட்ட படம் இது என கேட்டுள்ளனர் இதற்கு அவர் பதில் சொன்னதை கேட்டு பலரும் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தளபதி 66 படத்தில் நடித்து வருகிறேன் இதில் என்ன நடிக்கிறேன் எப்படி நடிக்கிறேன் என்ன கேரக்டர் பண்ணுகிறேன் என்பதை வெளியே சொல்ல முடியாத சூழலில் உள்ளேன் எப்படியும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது பின்னர் தெரிந்து கொண்டு இதுதானா சார் என்று கேட்பீர்கள் தளபதி 66 அப்டேட்டை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நேரடியாக பேசி கலந்துகொண்டு பின் தெரிவிப்பார்கள் என அவர் கூறினார்.