நீங்கள் பாலாஜி கூட நடிப்பீர்களா என ரசிகர்கள் கேள்வி.! அதற்கு ஷிவானியின் பதில் என்ன தெரியுமா.?

shivani and balaji
shivani and balaji

பிரபல விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நிறைவுற்றது. நிகழ்ச்சியின் மூலம் ரம்யா பாண்டியன், பாலாஜி, சம்யுத்தா, ரியோ ராஜ், ஷிவானி நாராயணன் உட்ப்பட இன்னும் பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 இல்  லாஸ்லியா மற்றும் கவின் காதல் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. அதே அளவிற்கு பிக் பாஸ் சீசன் 4 ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி இவர்களின் காதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இதில் ஷிவானியின் அம்மா இந்நிகழ்ச்சியில் ஷிவானியை மிகவும் கடுமையாக கண்டித்ததால் ரசிகர்கள் ஷிவாவாயின் அம்மாவனை திட்டி வந்தார்கள். இந்நிலையில் ஷிவானி இந்த போட்டியின் இறுதியில்  சிங்கப் பெண் என்ற பெயருடன் வெளியேறினார்.

இந்நிலையில் ஷிவானி நாராயணன் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பாலாஜியுடன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது அவார்ட் பங்க்ஷன் ஒன்றில் இருவரிடமும் பேட்டி எடுத்து உள்ளார்கள்.

அதில் ஷிவானி நாராயணனிடம் நீங்கள் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளீர்களா என்று கேட்டுள்ளார்கள். அதற்கு ஷிவாணி நாராயணன் ஆமா நான் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளேன் அப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாலாஜி உடன் இன்னும் ரிலேஷன்ஷிப்பில் உள்ளீர்களா என்று கேட்டதற்கு ஆமாம் என்றும் கூறியிருந்தார். அதோடு பாலாஜி உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்றால் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக நல்ல கதை என்றால் நடிப்பேன்.நான் இந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்ய முடியாது படக்குழுவினர்கள் தான் முடிவு செய்வார்கள் என்று கூறியிருந்தார்.