ரஜினி குடும்பத்திற்கு ஒரு சட்டம் நரிக்குறவர் குடும்பத்திற்கு ஒரு சட்டமா.? ரோகினி திரையரங்கு உரிமையாளரை கிழித்தெடுக்கும் ரசிகர்கள்..

RAJINI
RAJINI

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் டிக்கெட் எடுத்து பத்து தல படத்தினை பார்ப்பதற்காக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தியேட்டருக்கு சென்ற நிலையில் அங்கு ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சமூகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது எனவே பக்கத்தில் இருந்த ரசிகர்கள் ஊழியர்களிடம் கேள்வி கேட்க பிறகு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை தாமதமாக படம் பார்க்க அனுப்பி வைத்தனர்.

எனவே அங்க எடுத்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாக தற்பொழுது ரோகினி திரையரங்க நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது. அதில் வந்திருந்த நரிக்குறவர் குடும்பத்தினருடன் குழந்தைகளும் இருந்ததாகவும் பத்து தல யு/ஏ சான்றிதழ் பெறப்பட்ட படம் என்பதனால் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தனர்.

எனவே இந்த விளக்கத்தினை பார்த்த நெட்டிசனகள் யூ/ஏ சான்றிதழ் என்ன விளக்கம் என்பதை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.அதாவது யு/ஏ சான்றிதழ் என்பது 12 வயதில் உள்ள குழந்தைகள் தனியாக பார்க்க கூடாது பெற்றோர்களின் துணையோடு வந்து பார்க்க முடியும் என்பது தான் விதி. அதனை ஒரு காரணமாக காட்டி இப்படி செய்தது மிகவும் தவறு என கூறியுள்ளனர்.

மேலும் மற்ற ரசிகர்கள் ரோகினி நிர்வாகம் கடந்த 2020ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ரஜினியின் தர்பார் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதையும் அப்பிடத்தினை பார்க்க வந்த நடிகர் ரஜினியின் பேரன் லிங்காவுக்கு பத்து வயது தான் இருக்கும் அவரை மட்டும் ஏன் அனுமதித்தீர்கள் என எழுப்பி உள்ளனர்.

இவ்வாறு ரஜினியின் குடும்பத்திற்கு ஒரு சட்டம் நரிக்குறவர்களுக்கு ஒரு சட்டமாயன கூறி இருக்கும் நிலையில் பல குழந்தைகளை  திரையரங்கில் அனுமதிப்பதாக கூறியுள்ளர் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.