முன்னணி நடிகைக்கு 35அடி கட்டவுட் வைத்த ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

keerthi suresh 1
keerthi suresh 1

தற்போதெல்லாம் நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே போல் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் முன்பு போல் இல்லாமல் தற்பொழுது நடிகைகளுக்கும் ரசிகர்கள் பெரிய கட்-அவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்து வருவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக பல கோடி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

அதோடு தற்பொழுதெல்லாம் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களையும் தனது திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் தான் சாணி காகிதம்.

இத்திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு நேரடியாக அமேசான் ப்ரைம் டைமில் ரிலீஸ் ஆனது இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மலையாளத்தில் இவர் நடிகர் டோவினோ தோமஸ் உடன் இணைந்து வாஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிறகு தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகிவரும் போலோ சங்கர் படத்திலும் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வருகிறார்.  மேலும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்துவரும் சர்க்காரு வாரி பட்டா எங்க திரைப்படத்தில் கதாநாயகியாக  வரும் மே 12ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

அப்படிப்பட்ட நிலையில் தற்போது ஆந்திராவில் சுதர்சன் திரையரங்கில் சர்க்காரு வாரி பட்டா ரிலீசை முன்னிட்டு மகேஷ்பாபு பிரம்மாண்ட  கட்டவுட்   வைத்துள்ள நிலையில் அதன் அருகில் நடிகை கீர்த்தி சுரேஷ் 35 அடியில் கட்டவுட்   வைத்துள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.